சாலை விபத்தை ஆய்வு செய்த பெண் காவல் உதவி ஆய்வாளர் லாரி மோதியதில் பரிதாப மரணம்!

728

நெல்லை அருகே ஏற்பட்ட சாலை விபத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மீது லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை நாரணம்மாள்புரத்தை அடுத்துள்ள நான்கு வழிச்சாலையில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தாழையூத்து பெண் காவல் உதவி ஆய்வாளர் அகிலா, சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி அகிலா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அகிலாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலை விபத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.