சசிதரூர் மனைவியின் மர்ம மரணம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி …!

574

சசிதரூர் மனைவியின் மர்ம மரணம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களுல் ஒருவரான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் 2014ஆம் ஆண்டு 5 நட்சத்திர விடுதி அறை ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ-ன் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அரசியல் நோக்கத்திற்காக பொதுநல வழக்கு என்ற பெயரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி தள்ளுபடி செய்துள்ளது.