சூரிய புயலால் பூமிக்கு ஆபத்து… | 2 நாட்களுக்கு பூமியில் பாதிப்பு இருக்கும் என நாசா எச்சரிக்கை ..!

1028

சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள வெடிப்பின் காரணமாக 2 நாட்களுக்கு பூமியில் பாதிப்பு இருக்கும் என நாசா எச்சரித்துள்ளது. சூரியப் புயல் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், செயற்கைக் கோள் செயல்பாடு, செல்போன் சிக்னல்கள், மின்சாரம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாசா எச்சரித்துள்ளது. சூரியப் புயல் மூலம் வெளியேறும் கதிர்கள் காந்த தன்மையுடன் பூமியை தாக்கும் என்பதால் மின்சாரம் சார்ந்த சாதனங்கள் பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் செயல்பாடு, ஜி.பி.எஸ். கருவிகள், செல்போன்கள் பாதிப்பை சந்திக்கும் என்றும், மின் வெட்டு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.