திருவாரூர் அருகே போலீசார் தாக்கியதால், இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

214

மன்னார்குடியை அடுத்த வேங்கைபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். பொங்கல் வைப்பதற்காக புதிய பாத்திரம் வாங்க கடைக்கு சென்றார். விலைபேசுவதில், கடைக்காரருக்கும், ஆனந்தராஜ்க்கும் வாய் தகராறு ஏற்பட்டது. கடை உரிமையாளர் புகார் அளிக்கவே, நேரில் வந்த போலீசார் ஆனந்தராஜை பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவமானம் தாங்காமல் அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஆனந்தராஜை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேரில் விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.