நீட் தேர்வின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு..!

318

நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே தமிழகம் அனிதா, பிரதீபா உள்ளிட்ட மாணவிகளை இழந்துள்ள நிலையில், இன்று மேலும் ஒரும் மாணவியை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்த மாணவி ஏஞ்சலின் சுருதி மருத்துவம் படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அவருக்கு போதிய மதிப்பெண் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியால் போனது இதையடுத்து பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் விருப்பமின்றி தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டு கல்லூரி சென்று வந்துள்ளார். இருப்பினும் தனது மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளதை நினைத்து வீட்டில் இருந்த யாருடனும் ஏஞ்சலின் பேசாமல் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று வீட்டில் இருந்த சுருதி, அறையின் கதவை பூட்டிவிட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த தமிழகம் அரியலூரை சேர்ந்த அனிதா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா, திருச்சி மாணவி சுபஸ்ரீ, கடந்த மே மாதம் 6-ஆம் தேதி நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், 5-வது உயிரிழப்பாக ஏஞ்சலின் சுருதி உயிரிழந்தள்ளார்.