2016-17 ஆம் ஆண்டில் நாட்டில் சர்க்கரைத் தட்டுப்பாடு இருக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

187

இதுதொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் அக்டோபரில் தொடங்கும் சர்க்கரைக்கான பருவத்தில் சுமார் 3 கோடியே 10 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஓராண்டின் தேவையான 2 கோடியே 60 லட்சம் டன்களை விட அதிகம் என்று உணவு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நடப்புநிதியாண்டில் சர்க்கரை உற்பத்தி 2 கோடியே 30 லட்சம் டன்களில் இருந்து 2 கோடியே 40 லட்சம் டன்களுக்கு இடைப்பட்டு இருக்கும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் 2016-17ஆம் ஆண்டில் சர்க்கரை தட்டுப்பாடு இருக்காது என கூறியுள்ள மத்திய உணவுத்துறை அமைச்சகம், நாட்டில் போதுமான அளவு சர்க்கரையை கையிருப்பில் வைத்திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.