அதிக விலைக்கு கரும்பு விற்பனை | விவசாயிகள் மகிழ்ச்சி

128

சேலம் மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் அதனை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் பொங்கல் திருநாளுக்காக கரும்பு பயிர்களை பயிரிட்டு வந்தனர். இம்முறை குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 அடி கரும்பு தர வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் கரும்பு விற்பனை கூடுதலாக ஆனதாலும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று பட்டாசு விற்பனை செய்யப்படுவது போல், பொங்கல் பண்டிகைக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.