மும்பையில் விடுதியின் 19-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

259

மும்பையில் கல்லூரி மாணவர் ஒருவர் தங்கும் விடுதியின் 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அர்ஜுன் பரத்வாஜ். இவர் மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றின் 19-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் பேசி அதனை பேஸ்புக் மூலமாக பேசி நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். இது குறித்து, தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பரத்வாஜை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து விடுதியில் அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போலீசார் பரத்வாஜ் எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அதில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான நான் வாழ தகுதியற்றவன் என அவர் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.