12-ம் வகுப்பு மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!

305

கடலூரில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் துறைமுதத்தை அடுத்த கோதண்டராமபுரம் பகுதியை சோர்தவர் அண்ணாதுரை. இவரது மகள் காவ்யா முத்துநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றி காவ்யா, 600 மதிப்பெண்களுக்கு 244 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் மதிப்பெண் குறைவானதால் மனமுடைந்த திவ்யா, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.