ரிக்சா ஓட்டும் தொழிலாளி தற்கொலை | சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

93

ஆத்தூர் அருகே ரிக்சா ஓட்டும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதான செல்வராஜ். ரிக்சா ஓட்டும் தொழிலை செய்து வந்த இவருக்கும், தீபா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது குழந்தையுடன் தீபா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை சமாதானம் செய்த செல்வராஜ் அவருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தீபா தெரிவித்துள்ளார். சாவில் மர்மம் உள்ளதாக செல்வராஜ் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சென்னை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க யுவராஜ் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.