ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி

333

ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமரை ராகுல் காந்தி திடீரென கட்டித் தழுவியிருக்கக் கூடாது என்று கூறினார். இதனால் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகியிருப்பதாக சுட்டிக் காட்டிய சுப்பிரமணியன் சுவாமி, ராகுல் செய்தது முற்றிலும் முறையற்ற செயல் என விமர்சித்துள்ளார். இதனை ஊக்குவிக்க கூடாது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.