மத்திய அமைச்சர்கள் கோட், சூட் அணிவது உணவகங்களில் பணிபுரிபவர்கள் போல இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பி்ரமணிய சுவாமி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

169

காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுப்பதால், ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனை நீக்க வேண்டுமென வலியுறுத்திய சுப்பிரமணியசுவாமி, சரக்குமற்றும் சேவை வரி மசோதா விஷயத்தில், விடாப்பிடியாக இருக்குமாறு காங்கிரஸைக் கேட்டுக் கொண்டதாக, தலைமைப்பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமண்யம் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இ்ந்நிலையில், பொருளாதாரத் துறைச் செயலர் ஷக்தி காந்த தாஸை தாக்கியும் கருத்து தெரிவித்துள்ளார். மகாபலிபுரம் நிலத்தை அபகரிப்பு செய்வதில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு உதவி செய்த குற்றச்சாட்டின்பேரில், ஷக்தி காந்த தாசுக்கு எதிராக ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
சுப்பிரமணிய சுவாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தமது அமைச்சகத்தை சேர்ந்த குடிமைப் பணி அதிகாரி ஒருவர் மீது கூறப்பட்டுள்ள நியாயமற்ற அபாண்டமான பொய்யுரை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமி, வெளிநாடுகளுக்கு செல்லும் மத்திய அமைச்சர்கள் நாட்டின் பாரம்பரிய மற்றும் நவீன இந்திய ஆடைகளை அணிய வேண்டும் எனக்கூறியுள்ளார். மத்திய அமைச்சர்கள் கோட், சூட் அணிவது உணவகங்களில் பணிபுரிபவர்களை போல இருப்பதாகவும் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்களின் ஆடை பற்றிய சுப்பிரமணிய சுவாமியின் கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.