நெல்லையில் தற்கொலை முயற்சி வழக்கில், நடவடிக்கை எடுக்காத காவல்துறை உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்..!

496

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கூலித்தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை முயற்சி வழக்கில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, கந்துவட்டி கொடுமையால் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி, இரண்டு மகள்களும் உயிரிழந்தனர். கந்துவட்டி கொடுமை குறித்து அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத விரக்தியில் தற்கொலை செய்ய முயன்றதாக இசக்கிமுத்து வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்காத அச்சன்புதூர் காவல் துணை ஆய்வாளர் முருகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பணம் கேட்டு மிரட்டிய கந்துவட்டிக்காரரான தள்வாய்ராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி, உறவினர் காளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.