தனியாக இருந்த ஆசிரியரை தாக்கிய மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்ததை கண்டித்தால் ஆத்திரம்!

539

ஹரியானாவில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் திட்டிய ஆசிரியரை மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜாஜ்ஜர் மாவட்டம் பஹார்தூர்க் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தார். அவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து வகுப்பறையில் தனியாக இருந்த ஆசிரியரை மாணவர் ஆயுதத்தை கொண்டு கொடூரமாக தாக்கினார். தாக்குதலை சமாளிக்க முடியாத ஆசிரியர், வகுப்பறையில் இருந்து தப்பி ஓடினார்.
கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.