காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று முழுஅடைப்பு போராட்டம் ..!

398

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாகவும், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாகவும் கூறி, பிரிவினைவாத தலைவர் கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா உட்பட 7 பேரை என்ஐஏ போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்கள், இன்று முழு அடைப்பு நடைபெறும் என அறிவித்தன. இதனையடுத்து, ஸ்ரீநகரில் இன்று பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு, பேருந்து, வாகனப்போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் ரோந்து வந்தபடி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, காஷ்மீரில் இன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.