நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் முடக்கம்..!

186

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 4வது நாளாக நீடித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச் சாவடி கட்டணத்தை அகற்றுதல், 3ஆம் நபர் காப்பீடு தொகை உயர்வை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 4வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் இயங்கவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் தொழில்துறை உற்பத்தி மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.