அக்டோபர் 25ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்..!

127

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் 6ஆவது நாளாக நீடித்து வருகிறது.

புதுச்சேரி போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்கக் கோரி, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் நிரந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், தற்காலிக ஊழியர்கள் மீது பணிநீக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நிர்வாகத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 6-ஆவது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.