வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ, வேன், கால் டாக்சி இன்று வேலை நிறுத்தம்….

284

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ, வேன், கால் டாக்சி இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ மற்றும் வேன்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வேலை நிறுத்தத்திற்கு, சிஐடியூ, எல்.பி.எஃப் உட்பட 12 தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோன்று, தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்கமாட்டோம் என அறிவித்துள்ளனர். ஓலா, உபேர் போன்ற தனியார் நிறுவனங்களின் வருகையால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிஐடியு குற்றச்சாட்டியுள்ளது.