ஜப்பானை நெருங்கும் ஜாங்டரி புயல்..!

368

ஜப்பானை நெருங்கியுள்ள புயலால் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லக்கூடிய 107 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் நாட்டில் கடந்த ஒரு மாதமாக அனல் காற்று வீசி வந்த நிலையில், தற்போது புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜாங்டரி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது இன்று அதிகாலை முதல் நகரத்தின் பல பகுதிகளில் வீசி சேதங்களை ஏற்படுத்தும் என ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் டோக்கியோ, உள்ளிட்ட பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்ய உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.