சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் STOP IPL என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது..!

289

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் STOP IPL என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், சென்னை சேப்பாகம் மைதானத்தில் வரும் 10 ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், காவிரி பிரச்சனை தீரும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்றார்.ஐபிஎல் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது என கேட்டுக்கொண்ட எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், வீரர்களை சிறைபிடிப்போம் என எச்சரித்துள்ளார்.இதே போல், ஐபிஎல் போட்டிகளை நடத்த சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழர்கள், STOP IPL, SAVE CAUVERY போன்ற ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.