ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க ஏற்பாடு – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

223

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடினாலும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என கூறினார். ஐ.நாவுக்கு சென்றாலும் அரசாணை செல்லும் எனக் கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடினாலும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி அளித்தார்.