ஸ்டெர்லைட் ஆலையில் 1,500 டன் கந்தக அமிலம் வெளியேற்றம் – ஆட்சியர் சந்தீப் நந்தூரி

140

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆயிரத்து 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 17-ந் தேதி கந்தக அமில சேமிப்பு கிடங்கில் வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி கந்தக அமிலத்தை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கடந்த ஆறு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது வரை ஆயிரத்து 500 டன் கந்தக அமிலம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. நாளை இரவுக்குள் கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.