ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கான அனுமதி ரத்து – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை ..!

266

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கான அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் திரும்ப பெற்றுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது யூனிட் விரிவாக்கத்திற்கு, கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று திரும்பப் பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் .இதில் 13 பேர் பலியாகினர். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது யூனிட் விரிவாக்கத்திற்கு, 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது. ஆலை விரிவாக்கத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.