ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்..!

401

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.நெல்லை அருகே கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 31 ஆம் தேதி மதுரையிலிருந்து நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறினார். காவிரி விவகாரத்தில் தமிழக்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம் சாட்டிய வைகோ, தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏமாற்று வேலை என்றும் சாடினார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் வைகோ வலியறுத்தினார்.