ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசுக்கு நன்றி – விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்..!

106

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வேதாந்தா நிறுவனம் அரசாணைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகினால் தமிழக அரசு உறுதியோடு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும் என்றார்.