பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

288

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மே 28-ம் தேதி உத்தரவிட்டது. இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. மேலும், ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கை குறித்து பசுமை தீர்ப்பாயமே விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.