தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

145

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஹரிராகவன் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சத்தியபாமா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில், போலீசாரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று ஆஜராக உத்தரவிட்டனர்.