ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட 14 பேருக்கு நீதிமன்ற காவல்…

174

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட 14 பேருக்கு வருகிற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 14 பேர் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி அனைவரையும் வருகின்ற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.