ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் – ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத்

82

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும் தான் காரணம் என்றார். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மாதம் 210 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராம்நாத் சுட்டிக்காட்டினார். எனவே ஆலையை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்க வாய்ப்பில்லை, நிரந்தரமாக மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது ஆலையின் நிர்வாக அதிகாரி பேசியிருப்பது தமிழக முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.