தலைவர்களின் சிலைகளை அகற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – உள்துறை அமைச்சகம் உத்தரவு.

669

தலைவர்களின் சிலைகளை அகற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலையை மர்மநபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளையும் அகற்றவேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார். ராஜாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தலைவர்களின் சிலைகளை அகற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிலைகளை உடைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.