மன்னார்குடியில் வீடுகட்ட குழி தோண்டும் போது அம்மன், கிருஷ்ணன் உள்ளிட்ட 3 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சுகேந்திரன். இவரது நிலத்தில் கட்டுமான பணிகளுக்காக குழி தோண்டும்போது அம்மன் ,கிருஷ்ணன் உள்ளிட்ட உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சாமிபீடம், சூடம் ஆராத்தி, மணி உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் சிலைகளை ஒப்படைத்தனர். சிலைகள் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்படும் என தெரிவித்த அதிகாரிகள், அதன் பின்னரே சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை என தெரியவரும் என கூறினர்.