ஸ்ரீரங்கம் பெருமாள் உற்சவர் சிலை மாற்றம்? : சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த உத்தரவு

359

ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் உள்ள உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் உள்ள சுவாமியின் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் முகாந்திரமில்லை என காவல்துறை ஏற்க மறுத்துள்ளது. இந்த நிலையில், ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் கோவில் மாற்றப்பட்டுள்ள உற்சவர் சிலையை மீட்கக்கோரி சென்ன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, ஆகமவிதிப்படி பொன். மாணிக்கவேல் விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க, தமிழக அரசு கூடுதல் கால அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.