கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி

402

திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கம் வருகை தந்த அவர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஸ்டாலினுக்கு ஆறுதல் தெரிவித்த அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திராவிட தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரி அரசு சார்பில் வெண்கல சிலை நிறுவப்படும் என அறிவித்தார். மேலும் காரைக்காலில் அமைய உள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி என்று பெயரிடப்படும் என்றும் தெரிவித்தார்.