கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம்..!

725

இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு, பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரள மக்களுக்கு, தமிழ்நாடு, டெல்லி, பீகார், அரியானா, குஜராத், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சார்பில் தலா 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடியும், மகாராஷ்டிரா அரசின் சார்பாக 20 கோடியும், உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் 15 கோடி ரூபாயும், ஜார்க்கண்ட் அரசு சார்பில் 5 கோடி என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால், கேரளாவிற்கு 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார். இதேபோன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண நிதியாக 2 கோடி வழங்கப்படும் என்றும், மணிப்பூர் மக்கள் துணை நிற்பார்கள் எனவும் அசாம் முதல்வர் பிரென் சிங் கூறினார்.