ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..!

167

2014-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சொர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற மறுநாள் ஊதிய உயர்வுக்கான நாளாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வை வழங்கலாம் என 2014-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் அமலில் இருந்து வருவதாகவும், தற்போது இந்த சலுகை 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகையை மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.