போராட்டத்தை நசுக்க நினைத்தால் மேலும் வீறுகொண்டு எழும் – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

330

தமிழக நலன்களுக்காக போராடுபவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை ஏவுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காக்கவும், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவும் போராடுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேச பாதுகாப்புச்சட்டம், குண்டர் சட்டம் போன்ற சட்டங்களில், பொய் வழக்கு போடும் நோக்கத்தில் காவல்துறை செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக நலன் காப்போர் மீது பாசிச அடக்குமுறை ஏவுவதா? எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ள வைகோ, அடக்குமுறை மூலம் போராட்டத்தை நசுக்க நினைத்தால் மேலும் வீறுகொண்டு எழும் எனவும் அந்த அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.