முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்ட கான்ராட் சங்மா..!

319

மேகாலயாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்கா வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார்.

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அம்மாநிலத்தின் தெற்கு துரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றுள்ளார். 8 ஆயிரத்து 420 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அவர் பெற்றார். முதலமைச்சராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், தெற்கு துரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றுள்ளார்.