பருவமழையால் நிரம்பிய அணைகள் : சம்பா சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

284

தென்மேற்கு பருவ மழையால் அணைகள் நிரம்பியுள்ள நிலையில் திருவாரூரில் சம்பா சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையால் அணைகள் நிரம்பியதால் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனை அடுத்து சம்பா சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமடைந்துள்ளனர். பாசன வயல்களில் தூர் அடித்தல்,விதை தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளாடி பயிர்களை விதைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, நன்னிலம் ஆகிய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு பணி செய்யப்பட்டுள்ளது.