தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவை 10ஆம் தேதி மாலை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

392

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவை நாளை மறுநாள் மாலை திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மீண்டும் சந்தித்து பேசுகிறார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், சட்டசபையை கூட்டி, முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.இதனைத்தொடர்ந்து, கடந்த 27ஆம் தேதி, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் ஆளுனரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 10-ம் தேதி சந்திக்க நேரம் ஒதுக்குமாறு திமுக சார்பில் ஆளுநர் செயலாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, ஆளுநர் வித்யாசாகர் ராவ் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, சட்டசபையை கூட்டி முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.