ஸ்டாலின் கைது செய்யப்படலாம் எனத் தகவல்…!

383

சேலம் செல்லும் வழியில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்பதால் அங்குப் பதற்றமான சூழ்நிலைக் காணப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சராயன் ஏரியின் புதர்களை அகற்றி, தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏற்கனவே தூர் வாரியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஏரியை ஸ்டாலின் இன்று பார்வையிடுவதாகவும் திமுக கூறியிருந்தது. சீரமைக்கப்பட்டிருந்த கரைகளை உடைத்து சேதப்படுத்தி, சட்ட விரோதமாக மணல் அள்ளிச் சென்றுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சட்டம், ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதால், சேலத்திற்கு செல்ல ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி, ஸ்டாலின் திட்டமிட்டபடி, சேலத்திற்கு செல்லவுள்ளார், இதையொட்டி அங்குப் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் செல்லும் கணியூர் சுங்கச் சாவடியில்
ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்பதால் அங்குப் பதற்றமான சூழ்நிலைக் காணப்படுகிறது.