காவிரி மேலாண்மை விவகாரத்தில் எந்தவித இடைக்கால ஏற்பாட்டுக்கும் தமிழக அரசு இணங்க கூடாது – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

265

காவிரி மேலாண்மை விவகாரத்தில் எந்தவித இடைக்கால ஏற்பாட்டுக்கும் தமிழக அரசு இணங்க கூடாது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்தவாறு மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் அணுகுமுறையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.இன்று நடைபெறும் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க நீர்வளத்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ள ஸ்டாலின்,அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி எந்தவித இடைக்கால ஏற்பாட்டுக்கும் தமிழக அரசு சமாதானம் செய்துகொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.