மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

542

பெட்ரோல், டீசல் விலையை வானளாவிய அளவில் உயர்த்தும் மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் கண் அசைவில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் லிட்டர் 82 ரூபாய்க்கும், டீசல் 75 ரூபாய்க்கும் விற்கப்படுவது பொருளாதார சீர்கேடு என்றும், பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த எக்சைஸ் வரியைக் குறைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலை உயர்வின் அழுத்தத்தைக் குறைத்திட அ.தி.மு.க அரசும் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 38 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 ரூபாய்க்கும், ஏற்றுமதி செய்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வியெழுப்பிய ஸ்டாலின் , இந்த கேள்விகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.