நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்

217

நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 50 முதல் 80 ரூபாய் மட்டுமே பெயரளவிற்கு உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில் குவிண்டாலுக்கு 200 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திருந்தால், அவர்களின் வாழ்வாதாரம் வளம்பெறத் தொடங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை குவிண்டாலுக்கு இரண்டாயிரத்து 310 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.