சட்டப்பேரவையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு ..!

211

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் திட்டமிட்ட சதி என்று குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேச ஸ்டாலினுக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். அதுமட்டுமன்றி துப்பாக்கிச்சசூடு குறித்து ஸ்டாலின் பேசியதும் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து உடனடியாக வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கண்துடைப்புக்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.