கர்நாடகாவுடன் நட்புறவு வைத்து காவிரி நீரை பெற்று தந்தவர் கருணாநிதி – தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்

284

கர்நாடகாவுடன் நட்புறவு வைத்து தேவைப்படும் நீரை பெற்று தந்தவர் கருணாநிதி என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர், காவிரி நீரை பெற்றுத்தரக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது எனக் கூறினார். மேலும், கர்நாடகாவுடன் நட்புறவு வைத்து தேவைப்படும் நீரை பெற்று தந்தவர் கருணாநிதி எனக் கூறிய அவர், நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ தமிழக அரசு கவலைப் படுவதில்லை என புகார் தெரிவித்தார்.