சட்டமன்ற குழுக்கள் அமைக்கக் கோரும் வழக்கு | ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதலமைச்சருக்கு நோட்டீஸ் .

84

சட்டமன்ற குழுக்களை அமைக்க கோரி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்று ஆறு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை சட்டமன்ற குழுக்கள் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டமன்ற குழுக்களை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் சட்டமன்ற செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.