மு.க.ஸ்டாலின் நேற்று இரவு லண்டன் பயணம்..!

797

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றார். அங்குள்ள பன்னாட்டு முனையத்தில் இருந்து அவர் துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றுள்ளார். லண்டனில் ஸ்டாலின் ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு, மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.