குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார்.

234

தமிழக முதலமைச்சராக ஒரிரு நாளில் சசிகலா பதவியேற்க உள்ளார். ஆனால் அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முதலமைச்சராக அவர் பதவியேற்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுவதற்காக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத்தலைவரிடம் அவர் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகே முதலமைச்சராக பதவியேற்க அனுமதிக்கவேண்டும் என அவர் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.