காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் – தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்

773

காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவதாக தெரிவித்தார். மீட்பு பயணத்தை இரு குழுக்களாக தொடங்க உள்ளதாகவும், கடலூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். காவிரிக்காக தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை மனமார ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.