வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த மு.க.ஸ்டாலின்..!

119

வெளி மாநிலங்களில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவன் சரவணன் மரணத்தில் தற்கொலைக்கு வாய்ப்பு இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவதாக சுட்டிக் காட்டினார். மேலும் அகமதாபாத்தில் நெல்லையை சேர்ந்த மாணவன் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை மேற்கோள்காட்டி, வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.இதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாணவன் மாரிராஜ் தற்கொலைக்கு முயற்சி செய்த செய்தி அறிந்தவுடன் தமிழக சுகாதாரத் துறை செயலாளர், குஜராத் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார். மேலும் வெளி மாநிலத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.